என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேலும் ஒரு மாணவி புகார் கைதான பாதிரியார் மீது 6 பிரிவுகளில் வழக்கு
- பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது
- எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
நாகர்கோவில் :
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. (வயது 29). இவர் பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.
பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்படி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது அவரது லேப்-டாப்பில் உள்ள விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அடைக்கப்பட்டார். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். புகாரில் பாதிரியாருடன் செல்போனில் சாட்டிங் செய்தேன்.
பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கி கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.