search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம்
    X

    நாகர்கோவிலுக்கு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம்

    • கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன.
    • ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் :

    சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் அனைத் தும் இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் நாகர்கோவில் வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன. ஆனால் நாகர்கோவில் நிலையத்திற்கு தாமதமாக வந்தது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அரை மணி நேரம் தாமதமாக வந்தது.

    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 8 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையத்தை வந்தடையும். ஆனால் இன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ரெயில் வந்து சேராததால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சியில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடப்பதால், ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை சென்ற தென்மாவட்ட ரெயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.

    Next Story
    ×