என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடசேரியில் லஞ்ச ஒழிப்பு சோதனை:- 34 பேரின் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிறுத்தி வைப்பு
- பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் 5 மணி நேரம் விசாரணை
- மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.
நாகர்கோவில்
வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ரா பணியில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவரி டம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிய வந்தது.
அவரது கையில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். மேலும் அவரது மேஜை டிராயர் மற்றும் பேக்கில் இருந்த பணத்தை யும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.17,853 பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் அந்த பணத்திற்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை யும் லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர். அப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த பல ஆவணங்கள் கிடப்பில் இருந்தது தெரிய வந்தது. 34 பேர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது தொடர்பான விபரங் களை கிராம நிர்வாக அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண் ணப்பிக்கப்பட்ட பட்டா மாறுதல் ஆவணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.
5 மணி நேரம் நடந்த இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. கிராம நிர்வாக அலுவலகத்தில் பணம் சிக்கியது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிகிறது. இதே போல் வடசேரி தெற்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் சோதனை மேற்கொண் டனர். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்