என் மலர்
உள்ளூர் செய்திகள்

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

- சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்மவிருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் இணைப்பு கட்டிடம் நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
இந்திய அரசு மூலம் சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்மவிருதுகள், (பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ) ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது. தற்போது 2022-2023ம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமுக சேவை, அறிவியல், பொறியியல், பொது நல தொண்டு, குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த சாதனையாளர்களிடமிருந்து பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் இணைப்பு கட்டிடம் நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு கடைசி நாள் 31.07.2022 ஆகும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.