என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே சுய உதவிக்குழு ஊழியர் மீது தாக்குதல்
    X

    குழித்துறை அருகே சுய உதவிக்குழு ஊழியர் மீது தாக்குதல்

    • வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.
    • போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜிஜோ. இவர் சுய உதவி குழுவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஜிஜோ சுய உதவி குழுவில் இருந்து கொடுக்கப்படும் கடன் தொகையை வசூலிக்கும் வேலையையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவருக்கு சுய உதவி குழுவில் இருந்து லோன் கொடுத்துள்ளனர். வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று லோன் தொகையினை வசூலிப்பதற்காக ராஜகுமாரின் வீட்டுக்கு ஜிஜோ சென்றுள்ளார். அப்போது ராஜகுமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் லோன் தொகை வசூலிக்க சென்ற ஜிஜோவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜகுமார் திடீரென ஜிஜோவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜிஜோ களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மது போதையில் சுய உதவி குழு ஊழியரை வாலிபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×