என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/30/1940868-16.webp)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
- ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி :
குமரிமாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா நாளைமறுநாள்செப்டம்பர் 1-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்ததிருவிழாவை யொட்டி தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும்நடந்து வருகிறது. திருவிழாவின் 9 -ம் நாளான நாளை (31-ந்தேதி) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
இதையொட்டி நாளை மாலை4மணிக்கு இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான செப்டம்பர் 1-ந்தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்ததிருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்குமார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.