search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் துறையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்
    X

    மார்த்தாண்டம் துறையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம் துறை மீனவ கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் கொல்லங்கோடு (இருப்பு மார்த்தாண்டம் துறை)க்கு சிகிச்சைக்கு செல்லவும், பேரிடர் காலங்களில் பாது காப்பான இடங்களுக்கு செல்லவும் வேண்டி உள்ளது. பிரதான சாலைக்கு செல்வதற்காக 4 கிலோ மீட்டர் பயண தூரத்தை தவிர்க்க மார்த்தாண்டம் துறை ஆலயம் முன் பகுதி யிலிருந்து துணை ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே பாலம் உள்ளது.

    ஆனால் மக்கள் பயன்படுத்த முடியாதபடி காணப்படும் இந்த பழுதடைந்த பாலத்தை மாற்றி புதிய உயர் மட்ட பாலம் அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏ.வி.எம். சானலின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம் அமைக்க மூலதன மானிய நிதி 2023-2024-ல் ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பணிக்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு பால பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர், நகராட்சித்துறை அமைச்சர் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×