search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - போதை பழக்கத்திற்கு அடிமையானால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் - போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு
    X

    வடசேரி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - போதை பழக்கத்திற்கு அடிமையானால் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் - போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சு

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வபர்களின் சொத்துக்களும் முடக்கப் பட்டு வருகின்றன.
    • குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வபர்களின் சொத்துக்களும் முடக்கப் பட்டு வருகின்றன.

    இதற்கிடையே போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதை பொருட்களுக்கு எதிராக ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகளிலும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் வடசேரியில் உள்ள பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் பேசிய போது, "உங்களது வீட்டில் சகோதரரோ அல்லது தந்தையோ போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும். போதை பழக்கத்துக்கு ஆளாகுபவர்கள் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு வேறு எந்த செயலிலும் நாட்டம் இருக்காது. போதைப் பழக்கத்திற்கு ஆளானால் படிப்பு பாதிப்பதோடு எந்த விளையாட்டிலும் ஈடுபட முடியாது. குடி பழக்கத்துக்கு ஆளானால் வீட்டை கவனிக்க முடியாது.

    இதனால் வீட்டில் மகிழ்ச்சி இல்லாமல் போகும் போதைப் பழக்கத்தால் கெட்டது மட்டுமே நடக்குமே தவிர எந்த நல்லதும் நடக்காது. எனவே, மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுபடி போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

    Next Story
    ×