என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 பகுதிகளில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
- போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
நாகர்கோவில்:
சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை நடத்தின.
களியக்காவிளை பேருந்து நிலையம், மேல்பாலை சந்திப்பு, மார்த்தாண்டம் காவல் நிலையம், குலசேகரம் பேருந்து நிலையம், இணையம் பேருந்து நிலையம், கருங்கல் பேருந்து நிலையம், ஆலஞ்சி பேருந்து நிலையம், அருமனை சந்திப்பு, குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முட்டம் கலங்கரை விளக்கம்,
வில்லுக்குறி சந்திப்பு, இராஜாக்கமங்கலம் காவல் நிலையம், சுங்கான்கடை சந்திப்பு, பள்ளம், எட்டாமடை பேருந்து நிலையம், அஞ்சுகிராமம் பேருந்து நிலையம், தென்தாமரைகுளம் பேருந்து நிலையம், ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம், கன்னியாகுமரி காந்தி மண்டபம், கார்மல் போதை நோய் நலப்பணி மையம், இராமன்புதூர் ஆகிய 21 பகுதிகளிலிருந்து தொடங்கிய ஜோதி ஓட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.குமரி மாவட்டத்தில் போதைபொருள் உட்கொள்வதை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்களின் முழு ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.
இன்றைய சூழலில் 16 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்ககூடியதாக உள்ளது. இப்பழக்கத்தினை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் இல்லா குமரி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி கலெக்டர் அரவிந்த் கேடயங்களை வழங்கினார். மேலும் போதை புழக்கத்தில் இருந்து மீண்ட நபர்களை கவுரவப்படுத்தினார்.
நிகழ்சியில் போதை ப்பொருளுக்கு எதிரான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது. போதை பொரு ட்களுக்கு எதிராக உறுதி மொழியையும் கலெ க்டர் அரவிந்த் தலைமை யில் நிகழ்ச்சியில் ப ங்கேற்றவர்கள் எடுத்து க்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, திருப்புமுனை போதை மறுவாழ்வு மைய இயக்குநர் நெல்சன், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நர் அருண்குமார், அக ஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்