என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட கொடைக்கானலில் 12 இடங்களை சுற்றி பார்க்க சிறப்பு கட்டணத்தில் பஸ்கள் இயக்கம்
- நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தலா ரூ.75 கட்டணம்
நாகர்கோவில் :
கோடை விடுமுறையையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நாகா்கோவில் மண்டலம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக கொடைக்கானலுக்கு செல்ல விரும்புவோர் வசதிக்காக, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் அங்குள்ள 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து அப்பர் லேக், மெயர் பாயிண்டு, பாம்பார் ஆறு, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், ஏரி, மியூசியம் என 12 இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதற்கு பெரியவர்களுக்கு தலா ரூ.150 கட்டணமும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தலா ரூ.75 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா சேவை ஏப்ரல் மற்றும் மே மாதம் மட்டுமே இருக்கும். மேலும் கொடைக்கானலுக்கு 50 பேர் கொண்ட குழுவினர் செல்ல விரும்பும் பட்சத்தில் தங்கள் ஊர்களில் இருந்தே பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக 50 சுற்றுலா பயணிகளின் டிக்கெட் கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 94875 99082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் தெரிவித்துள்ளார்.






