என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 273 பேர் மீது வழக்கு
- ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- இளைஞர் காங்கிரஸ் சார்பாக இரணியல் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் :
குஜராத் மாநிலம் சூரத் விசாரணை போட்டியில் நடந்து வந்த ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
சூரத் விசாரணை கோர்ட் அளித்த தண்டனைக்கு தடைகோரி குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நேற்று ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் மண்டல தலைவர் சிவபிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து வடசேரி போலீசார் நவீன்குமார் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உட்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 101 பேர் மீதும் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அழகிய மண்டபத்தில் மாவட்ட தலைவர் பினுலால்சி ங் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் இக்னேஷியஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்ப ட்டனர். கைது செய்யப்பட்ட 155 பேர் மீதும் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 273 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பாக இரணியல் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் டைசன் தலைமை தாங்கினார். இளைஞர்கள் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். குளச்சல் தொகுதி தலைவர் ஜேக்கப், விஜி மோகன், சுமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்