என் மலர்
உள்ளூர் செய்திகள்
விடிய விடிய சோதனை சார்பதிவாளர்-புரோக்கர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு - முக்கிய ஆவணங்கள் சிக்கியது
- இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்
- 6 புரோக்கர்கள் சிக்கி னார்கள். மேலும் பத்திரப்பதிவு உதவியாளர்கள் 4 பேரும் பிடிபட்டனர்
நாகர்கோவில் :
இரணியல் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
இதை தொடர்ந்து இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 6.30 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீ சாரை கண்டதும் அங்கிருந்த புரோக்கர்கள் பணத்தை அங்கும் இங்கும் பதுக்கி வைத்தனர். மேலும் சிலர் கையில் இருந்த பணத்தை தூக்கி வீசினார்கள். பின்னர் புரோக்கர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.
இதில் 6 புரோக்கர்கள் சிக்கி னார்கள். மேலும் பத்திரப்பதிவு உதவியாளர்கள் 4 பேரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவ லகத்தில் பதுக்கி வைத்தி ருந்த பணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப் பற்றினார்கள். மொத்தம் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 800 பணம் சிக்கியது.
இது தொடர்பாக சார் பதிவாளர் பொறுப்பு சுப்பையாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசார ணை நடத்தினார்கள். நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இன்று காலை 5 மணிக்கு சோதனை முடிவடைந்தது. சுமார் 10 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நேற்று நடந்த பத்திரபதிவு குறித்த விவரங்களையும் அதிகாரி யிடம் கேட்டறிந்தனர். அது தொடர்பான சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அங்கு சிக்கிய பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட் டது.
இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு சுப்பையா மற்றும் 6 புேராக்கர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.