என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
- படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதி
- மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 41). கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபி ஜாய் (25). ஆனந்த் கடந்த 3-ந்தேதி குடும்ப தகராறில் மது அருந்திவிட்டு கையால் மனைவி பேபி ஜாயை கன்னத்தில் அறைந்தாராம். பின்னர் இரும்பி கம்பியை காட்டி மிரட்டல் விடுத்தாராம்.
இதில் படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






