search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களை திருடும் வாலிபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள்
    X

    குமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களை திருடும் வாலிபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள்

    • போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை
    • ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. அஞ்சு கிராமம் வாரியூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜின், கன்னியாகுமரியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரி வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலை வேலைக்கு வந்த ஜார்ஜின், வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. இதுகுறித்து அவர், கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஜார்ஜனின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 3 மாதங்களில் மட்டும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் திருடர்களின் உருவம் சிக்கியுள்ளதால் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பைக் திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×