என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈசாந்திமங்கலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும்
- ஆண்டிபொற்றை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும்
- கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு
நாகர்கோவில்:
ஈசாந்திமங்கலம் பகு தியைச் சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரும்பு பட்டை ஒன்று கழன்று விழுந்தது. அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினான்.
இதனால் அந்த டவரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தொடர்ந்து அந்த செல்போன் கோபுரம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனடியாக அந்த செல்போன் கோபுரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இதே போல் பேச்சி ப்பாறை ஆண்டி பொற்றை பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனு வில்ஆண்டிபொற்றை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும்.ஆண்டிபொற்றையிலிருந்து தோனிக்குழி செல்லும் சாலையை சீரமைக்க வே ண்டும். தோனி குழியில் தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.