search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சிமெண்ட் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்
    X

    குமரி மாவட்டத்தில் சிமெண்ட் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கோரிக்கை
    • ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    மார்த்தாண்டம்,அக்.14-

    தமிழக காங்கிரஸ் கட்சி யின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிமெண்ட் விலை மூடை ஒன்றுக்கு 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், கட்டுமானத் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் விவ சாயத்திற்கு அடுத்த படியாக தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பது கட்டுமானத் துறை யாகும். கட்டுமான தொழிலில் சிமெண்டின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த 7 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் மூடை ரூ.300 முதல் ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் செயற்கையான முறையில் சிமெண்ட் தட்டுப்பாட்டை உருவாக்கி அதிரடியாக தாறுமாறாக விலையை உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் மூடை ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது மூடை ரூ.450 வரை விற்பனை செய்யப்படு கிறது.

    இதற்கு முன்பு எல்லாம் சிமெண்ட் ஒரு மூடைக்கு 10 ரூபாய் தான் அதிகரிக்கும். ஆனால் தற்போது சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் எதுவும் விலை உயராத நிலையில் சிமெண்ட் விலை உயர்த்தப் பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இந்த விலை உயர்வால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் காங்கிரீட் வீடுகள் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளும், வங்கிக்கடன் உதவி பெற்று வீடு உள்ளிட்ட கட்டிடப்பணி கள் செய்து வருவோரும், ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை எடுத்து செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத் தில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆகவே சிமெண்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் 150 ரூபாய் வரை உயர்த்தபட்டுள்ள சிமெண்ட் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு ஒரு குழுவை ஏற்படுத்தி அக்குழுவினர் கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×