என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் மிளகாய், பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு
- தக்காளி ரூ.50-க்கு விற்பனை
- சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.
:நாகர்கோவில்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வெள்ளரிக்காய், புடலங்காய், தடியங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வருகிறது. தக்காளி பெங்களூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேட்டுப்பாளையம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.
கடந்த சில நாட்களாக காய்கறி வரத்துகுறைய தொடங்கியதையடுத்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், கேரட், மிளகாய், விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. பீன்ஸ், மிளகாயின் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.110-க்கும், மிளகாய் ரூ.120-க்கும் விற்பனையானது.
தக்காளியின் விலையும் தினமும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.25-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.50-க்கு விற்பனையானது. இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று இஞ்சியின் விலை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம், சேனை விலையும் அதிகரித்து வருகிறது. சேனை கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
தக்காளி ரூ.50, வழுதலங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, வெண்டைக்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30, மிளகாய் ரூ.120, பின்ஸ் ரூ.110, கேரட் ரூ.80, சேனை ரூ.70, இஞ்சி ரூ.200, சின்ன வெங்காயம் ரூ.75, பாகற்காய் ரூ.80-க்கு விற்பனையானது.
காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், உள்ளூரிலிருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வெளியூர்களில் இருந்தும் குறைவான அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வருவதால் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. இன்னும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்