search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 90 டாஸ்மாக் பார்கள் மூடல்
    X

    குமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 90 டாஸ்மாக் பார்கள் மூடல்

    • மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகளில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது
    • மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    தஞ்சாவூர் மதுபான கடையில் மதுபானம் அருந்திய 2 பேர் பலியா னார்கள். விழுப்புரம் மாவட் டத்தில் விஷ சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்ட வரும் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அனுமதியின்றி மது விற்பனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியின்றி இயங்கும் பார்கள் மீதும் நடவ டிக்கையை மேற்கொள்ளப் பட்டது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். கடந்த 2 நாட்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 25-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட வர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் பார்களை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 115 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 20 பார்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி செயல்பட்டு அனைத்து பார்களையும் மூட நடவடிக்கை மேற் கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் சுமார் 90 பார்கள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பார்களை அதிகாரிகள் மூடினார்கள்.

    Next Story
    ×