என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 260 பேருக்கு இலவச பஸ் பாஸ் - கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
- தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல் வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
- 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் புதுப்பித்து வழங்கும் முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரிவோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற முகாமில் 260 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்து வழங் கப்பட்டுள்ளது. மேலும், 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இம்முகாமானது நாகர்கோவில் எஸ். எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 30-ந் தேதி கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 31-ந் தேதி விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்டப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் ஏப்ரல் 1-ந் தேதி (சனிக்கிழமை) கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இலவச பஸ் பயண அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவ தற்கான அசல் சான்று, சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று. தினசரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறும் அசல் சான்றுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருகை தந்து இலவச பஸ் பயணச்சலுகை அட்டை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பிரம்மநாயகம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்