என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது
- இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி :
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடை பெறுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. இந்த நிலையில் புதுக்கடை அருகேயுள்ள அம்சி, கீழ்குளம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நேற்று அந்த பகுதியில் புதுக்கடை சப் - இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது கீழ்குளம் அருகே தண்டுமணி பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து, வாகனத்துடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை அருகே அம்சி ஒருபிலாவிளைபகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெப்ரின் விஜய் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.