என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியல்; 44 பேர் கைது - மின்சார கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்
- வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்
- போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மின்சார மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடந்தன.
வீட்டு வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தாமரைசிங், சுரேஷ் மேசியா, நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர்.