search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விவரம்
    X

    பிளஸ்-1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விவரம்

    • குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
    • புள்ளியியலில் 145 பேர் தேர்வு எழுதியதில் 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொழிப்பாடத்தில் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதியதில் 22 ஆயிரத்து 128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.36 ஆகும்.

    ஆங்கில பாடத்தில் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதியதில் 22 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.08 சதவீதம் ஆகும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 5 ஆயிரத்து 651 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 642 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.84 சதவீதம் ஆகும்.

    கணிதத்தில் 13 ஆயிரத்து 806 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.77 சதவீதம் ஆகும். இயற்பியலில் 17 ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 183 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98 சதவீதமாகும்.

    வேதியலில் 17 ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.99 சதவீதமாகும்.

    உயிரியலில் 7 ஆயிரத்து 837 பேர் தேர்வு எழுதியதில் 7 ஆயிரத்து 741 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.78 சதவீதம் ஆகும். தாவரவியலில் 4 ஆயிரத்து 382 பேர் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.57 சதவீதமாகும்.

    விலங்கியலில் 4 ஆயிரத்து 362 பேர் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 199 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.82 சதவீதம் ஆகும்.புள்ளியியலில் 145 பேர் தேர்வு எழுதியதில் 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 100 சதவீதம் ஆகும்.

    Next Story
    ×