என் மலர்
உள்ளூர் செய்திகள்
ரூ.85 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு - கடலரிப்பு தடுப்பு சுவர்கள்
- மீனவ மக்களின் குடியிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
கன்னியாகுமரி:
கிள்ளியூர் தொகுதி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இரையுமன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதியில் போடப்பட்ட கடலரிப்பு தடுப்புச்சுவர் அலையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அந்த பகுதியில் அரசு பள்ளியில் அமைக்கப்ப ட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்தூர் ஊராட்சி, இரயுமன்துறை மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் மீனவர் குடியிருப்புகளை பாதுகாக்க தற்காலிக தடுப்பு சுவர் போர்க்கால அடிப்படையில் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினேன்.
அதுபோல, தொடர்ந்து ஏற்படுகின்ற கடல் சீற்றத்திலிருந்து இரையுமன்துறை மீனவ மக்களின் குடியிருப்புகளை நிரந்தரமாக பாதுகாப்பதற்கு தொடர்தூண்டில் வளைவுகள் மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க மீன் வளத்துறையால் ரூ. 30 கோடி மதி ப்பீட்டில் நபார்டு திட்ட அலகு 28 - ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் அரசாணை வெளியிட்டு மீன் வளத்துறையின் மூலம் செயல்பாட்டிற்கு வரும். மேலும், இதே போல் சின்னத்துறை, இரவிபுத்தன் துறை கிராமங்களிலும் முறையே 35.50 கோடி, 19.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகள் அமைக்கவும் நாபார்டு திட்ட அலகு 28-ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.