search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனநாயக கடமையை நிலை நாட்ட வேண்டும் - அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்களிக்க கல்லூரி மாணவ-மாணவிகள் முன் வரவேண்டும் - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேச்சு
    X

    ஜனநாயக கடமையை நிலை நாட்ட வேண்டும் - அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்களிக்க கல்லூரி மாணவ-மாணவிகள் முன் வரவேண்டும் - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேச்சு

    • வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்
    • வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் 13-வது தேசிய வாக் காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் களை கண்டறிந்து வாக் காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக் களிப்பேன்" என்ற கருத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18 வயது பூர்த்தியானவர்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் , தகுதியற்றவர்களை பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளுக்கான படிவங்க ளான 6 , 6A , 6B, 7 மற்றும் 8 பெறப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது .

    குறிப்பாக, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள, கல்லூரி மாணவ, மாணவிகள் அனை வரும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஜன நாயக உரிமையாகிய வாக்குரி மையை நிறைவேற்றும் வகையில் , நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும்.

    மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் . மேலும் , 18 வயது நிரம்பிய மாணவ , மாணவியர்கள் அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத மற்றும் இடம்பெறாத மாணவ, மாணவியர்கள் , பொதுமக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவல கங்கள், நகராட்சிகள், மாநகராட்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் அலுவலகம் உட்பட மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அலுவலகங்க ளுக்கு சென்று படிவம் 6-ஐ பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ள முன்வர வேண்டும்.

    வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது. ஒவ்வொருவாக்கும் மக்களாட்சியில் சரியான நபரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய மானதாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    18- வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் பணத்திற்காக வாக்க ளிப்பதை தவிர்த்து தங்க ளது ஜனநாயக் கடமை யினை நிலைநாட்ட முன்வ ருவதோடு, "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக்களிப்பேன்" என்பதில் அனைவரும் உறுதி யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×