search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
    X

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு தரிசனம்

    • புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கூட்டம் அலை மோதியது
    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலை களுக்கு பாலூற்றி வழி பட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று காலை புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு நாக ராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன.நடை திறந்தது முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாகராஜரை தரிசிக்க வந்திருந்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாலூற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழி பட்டனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி கள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 4 வாரங்களாக இரு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர். பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×