search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் ரெயில் நிலையத்தில் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
    X

    வள்ளியூர் ரெயில் நிலையத்தில் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு

    • புறக்காவல் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை
    • பிளாட்பாரங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு எல்லைப் பகுதி அதிகமாக இருப்பதால் இங்கு இருந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஏற்பட்டு வந்தது. எனவே வள்ளியூர் மற்றும் குழித்துறையில் புற காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளியூர் மற்றும் குழித்துறையில் புற காவல் நிலையம் திறந்து செயல்பட தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் ரெயில்வே டி.ஐ.ஜி. அபிஷேக் தீட்சித் நேற்று வள்ளியூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். புறக்காவல் நிலையத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் பிளாட்பாரங் களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை குழித்துறை ெரயில் நிலையத்தில் டி.ஐ.ஜி. அபிஷேக் தீட்சித் ஆய்வு நடத்தினார். அங்குள்ள புற காவல் நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×