search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை நீடிப்பு - முக்கடலில் 24.9 மி.மீ. பதிவு
    X

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை நீடிப்பு - முக்கடலில் 24.9 மி.மீ. பதிவு

    • கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது
    • அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் அடித்து வரும் நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. ஆனால் கிழக்கு மாவட்ட பகுதிகளான அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. பூதப்பாண்டி பகுதியில் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது.

    முக்கடல் அணைப்பகுதி யிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 24.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவிப்பகுதி யில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சி பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.71 அடியாக உள்ளது. அணைக்கு 216 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.25 அடியாக உள்ளது. அணைக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இந்த நிலையில் அணைப்பகுதியில் மழை பெய்துள்ளது.முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.70 அடியாக உள்ளது.

    மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 9.4 பெருஞ்சாணி 14.4 சிற்றாறு1-11 சிற்றாறு2-14.2 பூதப்பாண்டி 20 கன்னிமார் 9.2 புத்தன் அணை 12.8 பாலமோர் 9.4 மாம்பழத்துறையாறு 19.2 திற்பரப்பு 8 முக்கடல் 24.9

    Next Story
    ×