என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே அரசு பஸ் மோதி முதியவர் பரிதாப சாவு - டிரைவர் கைது
- ரோட்டை கடப்பதற்கு செல்ல முயன்ற போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுமுத்து மீது மோதியது
- போலீசார் அரசு பஸ் ஓட்டி வந்த காட்டுகடை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஷாஜி என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை
கன்னியாகுமரி
தக்கலை அருகே பரைக்கோடு ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமுத்து (வயது 79). இவருக்கு பேபி என்ற மனைவியும், 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இன்று காலை பொன்னுமுத்து டீ குடிப்பதற்கு பரைக்கோடு பகுதிக்கு வந்தார். அப்போது ரோட்டை கடப்பதற்கு செல்ல முயன்ற போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுமுத்து மீது மோதியது. இதில் பொன்னுமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக இவரது மகன் சுபாஷ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அரசு பஸ் ஓட்டி வந்த காட்டுகடை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஷாஜி என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன பொன்னு முத்து உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.