search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி முழுமையாக அகற்றப்படும்
    X

    மேயர் மகேஷ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி முழுமையாக அகற்றப்படும்

    • நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது.
    • கிராமசபை கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருசடி பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மேயரிடம் வழங்கினர். இதில் அதிக பட்சமாக ஓய்வூதியம், விதவை பென்சன், நிவாரணம், சாலை பணிகள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் இடம் பெற்றிருந்தன.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மக்களின் குறைகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று அறியும் வகையில் இந்த கிராம சபை கூட்டம் தமிழக அரசு நடத்தி வரு கிறது. நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட 33-வது வார்டில் நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிராம சபை கூட்டம் என்பது காசு கொடுத்து கூடும் கூட்டமல்ல. மக்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை கொடுக்கும் கூட்டமாகும்.

    நாகர்கோவில் மாந கராட்சிக்குட்பட்ட சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. அதில் ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வார்டுகள் வாரியாக அதிகாரிகளுடன் நான் நேரில் சென்று குறை களை கேட்டு வருகிறேன்.

    ஆக்கிரமிப்பு தான் இந்த மாவட்டத்தின் பெரிய தலைவலியாக உள்ளது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் எந்தவித பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வழங்கப்படும் குப்பைகளை மக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். ஒரு நாளுக்கு 111 டன் குப்பைகள் மாநகாில் சேகரிக்கப்படுகிறது. அதில் வெறும் 30 டன் குப்பைகள் மட்டுமே தரம்பிரிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கிறது.

    கழிவு மற்றும் குப்பை களை சாலையோரம் வீசக் கூடாது. ஆண் குழந்தைகள் இருந்தால் ஓய்வூதயம் பெற மனு அளிக்க வேண்டாம். கோவில் நிலத்தில் வரி கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் ஒப்புதல் வழங்க வேண்டும். சுயஉதவி குழுக்களுக்கு கடன் மற்றும் நிவாரணம் அளிப்பதில் தமிழக அரசு முதன்மையாக உள்ளது. மக்களாகிய நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரை முன்மாதிரியான மாந கராட்சியாக மாற்ற வேண்டும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி ஆணை யாளர் ஆனந்த மோகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், சுதாகர், லீனஸ்ராஜ், கென்னடி, சேக் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×