search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருங்காலத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    X

    வருங்காலத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் பிளாஸ்டிக்கை தவிர்த்து பசுமை மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    மாவட்டத்திற்கே உரித்தான இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணி காக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார்.மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கே உரித்தான இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணி காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பொது நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு தடவை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனை வரும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது துணி பைகள், கூடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும்.

    மேலும், உங்கள் வீடுகளின் அருகாமையிலோ அல்லது கடைகளிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி னால் துறைசார்ந்த அலுவல ர்களிடம் தகவல் தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் எதிர் காலத்தில் அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகி றது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி (தேசிய நெடுஞ்சாலை), தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

    Next Story
    ×