search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தக்கலை பஸ் நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
    X

    தக்கலை பஸ் நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

    • பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது
    • மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலையில் அமைந் துள்ள காமராஜ் பேருந்து நிலையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வந்து செல்கிறது. இந்த பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது.இதனால் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்து போகின்றனர். மேலும் பயணிகளுக்காக நிழலகமும், ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதனை பயணிகள் பயன்படுத்தாத வாறு தனியார் வாகனங்கள் அத்துமீறி பேருந்து நிலையத்தினுள் நீண்ட நேரமாக நிறுத்தி செல்கின்றனர். இது போக சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு உணவருந்த செல்கிறார்கள். பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் தனியார் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசலும், சிலநேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது.

    இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் தக்கலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களாக பேருந்து நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தனர்.

    அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளிடம் தனியார் வாகன பார்க்கிங்கால் ஏற்படும் மோசமான விளைவு களையும் எடுத்துக் கூறி மீண்டும் இவ்வாறு அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை ஏற்படும் என எச்சரித்தனர்.தக்கலை போக்குவரத்து போலீ ஸாரின் இந்நடவடிக்கை பயணிகள், மத்தியில் வரவேற்பை பெற்றது.

    Next Story
    ×