என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே தனியார் வங்கியில் போலி நகை அடகு வைத்து மோசடி
- சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.