search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் காந்தியின் அரிய புகைப்பட கண்காட்சி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் காந்தியின் அரிய புகைப்பட கண்காட்சி

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடையே தெரிவதற்கு இந்த கண்காட்சி

    கன்னியாகுமரி :

    மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியா குமரி அரசு அருங்காட்சியகத்தில் "காந்தி ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் காந்தியடிகளின் இளமைக்காலம் முதல் இறப்பு வரை சித்தரிக்கும் புகைப்பட தொகுப்பு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த கண்காட்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் உழைத்தவர் மகாத்மா காந்தி. அவரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை வரும் இளைய தலைமுறையினரிடையே எடுத்து செல்லும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கண்காட்சியில் காந்தியடி கள் பங்கேற்ற, உப்பு சத்தியா கிரகம், தண்டி யாத்திரை போன்ற அகிம்சை போராட்டங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காந்தியின் இளமை கால புகைப்படங்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் என்று பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்ப ட்டுள்ளன. இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். மேலும் காந்தியடிகள் என்றாலே கைராட்டை தான் அனைவரின் நினைவுக்கு வரும், அதன் நினைவாக கைராட்டையும் வைக்கப் பட்டுள்ளது. கண்காட்சியினை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×