என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சின்னமுட்டத்தில் கந்தூரி விழா
Byமாலை மலர்23 Sept 2022 2:51 PM IST
- முஸ்லிம்கள் கடலில் குளித்து சிறப்பு தொழுகை
- நேர்ச்சையும் செலுத்தினார்கள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் கடற்கரையில் ஷேக் முகமது ஒலியுல்லா (முட்டத்தப்பா) தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஹிஜிரி ஆண்டும் ஸபர் மாதம் கடைசி புதன்கிழமை கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடைசி புதன்கிழமையான நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி மார்க்க அறிஞர்களின் கிராத் மற்றும் மௌலூது ஓதும் நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாலையில் கூட்டு பிரார்த்தனையும், நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னியா குமரி, நெல்லை மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்க ளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கடலில் குளித்து நேர்ச்சை செலுத்தினர். விழா ஏற்பாடு களை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story
×