என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோட்டாரில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது கோட்டாரில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/03/1756050-arrest.jpg)
கோட்டாரில் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 8 மாதங்களில் 56 பேர் மீது நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்ததன் பேரில் நடவடிக்கை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக் கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து குற்ற செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 8 மாதங்களில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் இச்சட்டச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதை யடுத்து குண்டர் சட்டத் தில் கைது செய் யப் பட்டவர்க ளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில், வடிவீஸ் வரம் பகுதியைச் சேர்ந்த வர் கிஷோர் என்ற கிஷோர்குமார் (வயது 21) சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கிஷோர்குமார் கஞ்சா வழக்கு ஒன்றில் கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் இருந்தது. ஆனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் அரவிந்த், பிரபல ரவுடி கிஷோர்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கிஷோர் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டை ஜெயி லில் போலீசார் அடைத்தனர்.