என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனமழை எதிரொலி: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - ஆழ்கடல் சென்றவர்களும் திரும்பி வர எச்சரிக்கை
- காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
- சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், டிச.25-
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நாளை குமரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில் இதற்கான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந்தந்த பங்கு தந்தைகள் மூலமாகவும், மீனவ பிரதிநிதிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களும் கரை திரும்புமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படகுகளை பாது காப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.