search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை
    X

    குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை

    • 200 பாசன குளங்கள் நிரம்பியது
    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் பர வலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடை விடாது மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.

    கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கொட்டா ரத்தில் அதிகபட்சமாக 14.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிய நிலையில் தற்பொழுது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.46 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.50 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.6, களியல் 3, கொட்டாரம் 14.2, குழித்துறை 4.2, மயிலாடி 10.2, நாகர்கோவில் 5.2, புத்தன்அணை 3, தக்கலை 1.4, குளச்சல் 6, இரணியல் 8.4, பாலமோர் 1.4, மாம் பழத்துறையாறு 2, அடையா மடை 4.2.

    Next Story
    ×