என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொட்டாரத்தில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்
- போலீஸ் டி.எஸ்.பி.ராஜா அறிவுரை வழங்கினார்
- இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் கொட்டாரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார்அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த100-க்கும்மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்த னர்.
இதில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவது குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாய்சன், முருகன், கன்னியாகுமரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஏட்டு மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கொட்டாரம் சந்திப்பு வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை விபத்தினை தடுக்ககூடிய சிறந்த அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினார்கள்.
இது தவிர கடந்த 2 நாட்களில் கன்னியாகுமரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.50ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.