search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈத்தாமொழியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
    X

    ஈத்தாமொழியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    • குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து குளச்சல் செல்லும் கடற்கரை சாலையில் ஈத்தாமொழி சந்திப்பில் சாலையோரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.

    இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சடித்தபடி வெளியேறுகிறது.

    குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    குடிநீர் வீணாவதோடு, சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

    மேலும் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்ைதகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது பற்றி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதுவரை குழாய் உடைப்பு சீரமைக்கப்பட வில்லை.

    உடைந்த குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் கடைகள் முன்பு தேங்கி நிற்பதால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×