என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/25/1797260-kanyakumari-merchants-argum.webp)
ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வியாபாரிகள்.
கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.
இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.