search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீடுகள் முன்பு பா.ஜனதாக கொடிகம்பம் நடும் விவகாரம் - குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    வீடுகள் முன்பு பா.ஜனதாக கொடிகம்பம் நடும் விவகாரம் - குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • அனுமதியின்றி வைத்தால் அகற்ற நடவடிக்கை
    • தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும்

    நாகர்கோவில், நவ.1-சென்னையில் அண்ணாமலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10 ஆயிரம் வீடுகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றுவார்கள் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் பா.ஜ.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், வீடுகளில் பாரதிய ஜனதா கொடி ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுகளில் கொடி ஏற்ற தயாராகி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடியேற்றுவதாக அறிவித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த ஒரு அனுமதியும் இன்றி கொடிக்கம்பங்கள் வைத்தால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாரதியஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 100 நாட்களில் பத்தாயிரம் இடங்களில் கொடியேற்ற திட்டமிட்டு உள்ளோம் என்றார்.

    Next Story
    ×