என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 65 சதவீதம் குறைந்துள்ளது
- அணைகள் பாசனக் குளங்களில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு
- பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாக மழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. சாரல் மழை மட்டுமே பெய்திருந்த நிலையில் வெயில் வாட்டி வதைத்தது.
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் 287.4 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 100 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 65 சதவீதம் குறைவாகும்.
தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பாசன குளங்களிலும் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கி யுள்ளது.
இதனால் கும்பபூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டரில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது 3 ஆயிரம் ஹெக்டரில் நெற் பயிர்கள் அறுவடை ஆகும் நிலையில் உள்ளன. மீதமுள்ள நெற்பயிர் கள்அறுவடைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை அந்த நெற்பயிர்கள் அறு வடையாக காலதாமதம் ஏற்ப டும். எனவே பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
பாசன குளங்களை பொருத்தமட்டில் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளது. ஆனால் அனைத்து குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது. பேச்சிப்பாறை அணை இன்று காலை 28.99 அடியாக உள்ளது. அணைக்கு 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை யில் இருந்து 685 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணைக்கு 32 கன அடிதண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்