என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது
- ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்படும்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயுத பூஜை விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். கோவில்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் நகரப் பகுதியில் ஆயுத பூஜை விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கு கார் வேன் ஓட்டுநர்கள் தயாராகி வருகிறார்கள்.
வேப்பமூடு வடசேரி ராணி தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களிலும் ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தக்கலை மார்த்தாண்டம் குழித்துறை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை விழா கொண்டாட்டத்தின்போது ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது பூசணிக்காய் சாலையில் உடைக்க க்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயுத பூஜையை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
ஆயுத பூஜையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு இன்று கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் அவல் பொரி கொண்டக்கடலை வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்திருந்தனர்.
இதனால் கடைவீதிகள் களை கட்டியிருந்தது. தக்கலை குளச்சல் அஞ்சு கிராமம் இரணியல் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் நாகர்கோவில் நகரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் காய்கறிகளின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்பட்டது.
வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு இன்று உயர்ந்திருந்தது.செவ்வாழை,கதலி போன்ற வாழைப்பழங்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆயுத பூஜையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 4 சப் டிவிஷன்களிலும் பாது காப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டு உள்ளார். சுற்றுலா தலங்க ளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்