என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாடகையை மொத்தமாக கட்ட வலியுறுத்துவதை கைவிட வேண்டும் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- 3 ஆண்டுகளுக்கு என்ற முறையில் அக்கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
- புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ளது.
நாகர்கோவில், ஜூன்.13-
முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் பல பகுதிகளில் கடைகள் கட்டப் பட்டு, வியாபாரிகளின் வசதிக்காக ஏலம் மூலம் வாடகை நிர்ணயிக்கப்பட்டும், அதற்கான வைப்புத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தோவாளையில் 2016-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 11 புதிய கடைகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு என்ற முறையில் அக்கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடையின் வாடகையினை மாதந்தோறும் கட்டி வந்தனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டுகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையில் 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, தொடர்ந்து அந்தந்த மாதங்கள் தங்களுக்கான வாடகையினை கட்டி வந்தனர்.
கடந்த 2 முறையும் இதே நடைமுறையில் இக்கடைகள் ஏலத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிலையில் வருகிற 30-ந்தேதியுடன் இக்கடைகளின் ஒப்பந்தம் முடிவடைவதனை முன்னிட்டு வருகிற ஜூலை 1-ந்தேதியிலிருந்து புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ளது.
புதிய ஒப்பந்தத்திற்கு சென்ற வியாபாரிகளிடம் இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற ஒப்பந்தத்தை 5 ஆண்டாக மாற்றி உள்ளதாகவும், ஒதுக்கப்படு கின்ற கடைகளுக்கு வைப்புத்தொ கையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்ட வேண்டும் எனவும், வாடகை ஏலத்தின் தொடக்க தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கப் பட்டு அதிக ஏலம் கேட்பவர்க ளுக்கு அக்கடை வழங்கப்படும் என்றும், பின்னர் ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்ற வாடகையினை கடை ஒதுக்கப்படுகின்ற வியாபாரிகள் தங்களது வாடகையினை மாதம், மாதம் கட்டாமல் 5 வருடத்திற்கான மொத்த மாத வாடகையினை கட்டுவதுடன், மேலும் ஆண்டுதோறும் வாடகையில் 5 சதவீதம் கூடுதல் வாடகை கட்டணத்தையும் இதோடு சேர்த்து கட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தோவாளையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏலம் விடப்படும் 11 கடைகளுக்கு வாடகையை மொத்தமாக கட்ட வலியுறுத்துவதை இந்து சமய அறநிலையத்துறை கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்