என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தலக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
Byமாலை மலர்7 Oct 2023 3:46 PM IST
- தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
- பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் அமைந்துள்ள தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தது.
இதனால் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை நீடித்து வந்தது. ஆகய தாமரைகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் ஆகாயதாமரைகள் அகற்றம் பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் சுபாஷ், புரவு தலைவர் பேராசிரியர் மகேஷ், தி.மு.க நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×