search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் வழக்கில் காசிக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை
    X

    பாலியல் வழக்கில் காசிக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை

    • மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி .போலீசார் தீவிரம்
    • காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 28) என்ஜினியர்.

    இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட சிலர் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் அளித்தனர். அந்த புகாரில் காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆதாரங்களை அளித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து காசியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

    காசி ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக காசி ஜெயிலிலேயே இருந்து வருகிறார். அவர் மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ள நிலையில் அந்த வழக்குகள் விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த பாலியல் வழக்கில் 29 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் காசியிடமிருந்து கைப்பற் றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களின் ஆதாரங்களை வைத்தும் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் காசி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் காசிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376 (2 என்) பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்திய தண்டனைச் சட்டம் 354 (சி) இளம் பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்திற் காக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 506 (2) கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. வழக்கு தீர்ப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டு காசி கண் கலங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் பாளை யங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    காசிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    காசி மீதான பாலியல் வழக்கில் அவருக்கு தண்ட னை விதிக்கப்பட்டதை யடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள மேலும் 5 வழக்குகளை துரிதமாக முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்குகள் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகளும் விசாரணை முடிந்து விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள மேலும் 2 வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×