என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி வனத்துறைக்கு ரூ.6 லட்சம் செலவில் தீயணைப்பு உபகரணங்கள் - மாவட்ட வன அதிகாரி வழங்கினார்
- தீயணைப்பு உபகரணங்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.
- ரூ.8 லட்சம் செலவில் தீயணைப்பு பொருட்களை கொண்டு செல்ல வசதி யாக வாகனம்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் களியல், குலசேகரம், வேளி மலை, அழகியபாண்டிய புரம், பூதப்பாண்டி ஆகிய 5 வன சரகங்கள் உள்ளது.
இந்த வனப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்க வசதியாக தீயணைப்பு உபகரணங்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங் கப்பட்டுள்ளது.
இதை மாவட்ட வன அதிகாரி இளையராஜா 5 வனசரக ஊழியர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று வடசேரியில் உள்ள வன அலுவலகத்தில் நடந் தது. தீயணைப்பு உபகர ணங்களை வன ஊழியர் களிடம் வன அதிகாரி இளையராஜா வழங்கினார்.
தீ கவச உடை, புகை தடுப்பு கண்ணாடி மற்றும் முக கவசம் செடிகளை வெட்ட வசதியாக கருவி கள், கொசு வலை தீத்த டுப்பு காலணிகள் உட்பட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.8 லட்சம் செலவில் தீயணைப்பு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.