search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் தடியடி
    X

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் தடியடி

    • போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்ய வேண்டும்
    • இந்து முன்னனி கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் 153 ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மண்டை க்காடு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    முன்னதாக அனைத்து விநாயகர் சிலைகளும் வாக னங்களில் ஊர்வலமாக தக்கலை அருகே உள்ள வைகுண்ட புரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

    இதில் சில வேன்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்ப்பட்டுள்ளது. சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்த வாகனம் அழகிய மண்டபம் பகுதியில் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும் படி கூறினர்.

    இதனால் போலீசாருக்கும் வாகனத்தில் வந்த பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பிறகு விநாயகர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டபுரம் ராமர் கோவிலுக்கு வந்தது. அங்கு வந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் சங்கரன் காவு பகுதியில் இருந்து வந்தவர்கள் போலீஸ் தடியடி குறித்து புகார் கூறினர்.

    மேலும் சம்பவத்தின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அங்கு இருந்த தாகவும் அவரது உத்தரவின் பேரில் தான் தடியடி நடத்தப்பட்ட தாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    இதற்கிடையில் தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்தை இடம் மாற்ற செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதற்காக கண்டன போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் இன்று மாலை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை எங்கு நடத்துவது, எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×