என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பாரதிய ஜனதா விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம் பாரதிய ஜனதா விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/30/1924166-12.webp)
பாரதிய ஜனதா விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.
- பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை தொடங்கினார். இதற்காக குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.
பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் கொடியசைத்து வாகனத்தை வழி அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் நடைபயணம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உலா வரும்.
மாவட்ட பொதுச்செ யலாளர் வக்கீல் ஜெகநாதன், பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், மாநகர தலை வர்கள் ராஜன், வேணு கிருஷ்ணன், சிவசீலன், தோவாளை ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.