search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலக்குளம் பி.எஸ் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தீப ஒளியேற்றும் விழா
    X

    தலக்குளம் பி.எஸ் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான தீப ஒளியேற்றும் விழா

    • சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை
    • சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர்

    கன்னியாகுமரி :

    தலக்குளம் பிஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளியின் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான தீப ஒளியேற்றும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் தாளாளர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ப.ஆறுமுகம், தலைமை தாங்கினார். மருத்துவப்பணிகள் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பிரகலாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியை சுபிதாஜினி வரவேற்புரை வழங்கினார்.

    இவ்விழாவில் கல்லுரி நிர்வாக அதிகாரி குற்றாலம் பிள்ளை, மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர். சரோஜினி, நரம்பி யல் நிபுணர் டாக்டர். பழனியாண்டி, குழந்தை நல நிபுணர் டாக்டர்.சுனிதா, குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஜூலியா, பி.எஸ் கல்லூரி முதல்வர் டாக்டர். அமுது மற்றும் மக்கள்தொடர்பு அதிகாரி நாராயணபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

    கைவிளக்கு ஏந்திய காரிகையான நைட்டிங்கே லின் விளக்கை பி.எஸ்.மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்.டோரல் டுவா ஏற்ற அதைத்தொடர்ந்து பி.எஸ் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.ஜோஸ்பின் சுதா, மற்றும் பேராசிரியை பால் சஜிலா, ஆகியோர் சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு ஒளி ஏற்றிவைத்தனர். பின் பி.எஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அமுது உறுதிமொழி மாணவர்க ளுக்கு உரைத்தார்.

    விழாவின் முடிவில் கல்லூரி பேராசிரியர் அபிஷாபெல் நன்றியுரை யாற்றினார்.

    Next Story
    ×